Sunday, November 13, 2011

பறவை பார்த்தலுக்கு நமக்கு அடிப்படையான தேவை


பறவை பார்த்தல் -தொடர் 2



பறவை பார்த்தல் என்பதை பற்றிய இரண்டாவது பதிவு இது. பறவைகள் பற்றி புராணங்களிலும், கதைகளிலும் இடம் பெற்றுள்ளன. பறவை பார்த்தல் ஒரு மிகச்சிறந்த பொழுது போக்கு கலை, மனஅழுத்தத்தை குறைக்கும் மருந்து. நல்ல உடற்பயிற்சியும் கூட எனலாம். பறவைகள் இல்லாமல் மனித குலமும், இயற்கையும் தழைப்பது கூட கடினம்.

காரணம், பறவைகள் தங்கள் உணவுக்காக ஒரு இடததை விட்டு மற்றொரு இடத்திற்கு பறந்து செல்லும் போது தாவரத்தின் விதைகளை பல்வேறு இடங்களிலும் பரப்புகின்றன.
இதனால் ஒரு தாவரம் பல இடங்களில் தனது சந்ததியை பரப்புகிறது. ஏராளமான மரங்கள் காடுகளில் இன்று செழித்து தழைத்திருக்க காரணம் பறவைகள் தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ரோாம் மக்கள் பறவைகளின் குரலையும், அது பறக்கும் தன்மையையும் வைத்து காலநிலையை அது கணித்து விடுகிறது என்கிறார்கள்.

ராஜஸ்தான் பாலைவனம், இமயமலை தவிர்த்து எல்லா இடங்களிலும் பறவைகளை காணலாம். ஆனால் இமயமலையிலும் கூட காகங்கள் சமாளிக்கின்றன. பறவை பார்த்தலுக்கு சிறந்த இடம் காடுகள் தான் என்கிறார்கள் பறவை பார்த்தலில் அதிக அனுபவம் கொண்டவர்கள்.

அதிகாலை நேரங்களிலும், இலையுதிர் காலங்களிலும் பறவைகளை நன்றாக கவனிக்க இயலும். பறவை பார்த்தலுக்கு நமக்கு அடிப்படையான தேவை ஒரு நல்ல பைனாகுலர், ஒரு குறிப்பு நோட்டு, பறவை இனங்களை பற்றி தெரிந்து கொள்ள ஒரு புத்தகம் மற்றும் பொறுமை. இது தான் அடிப்படை.

இந்த தொடரில் இந்திய பறவை வகைகளை பற்றி பதிவிட முயற்சி எடுத்திருக்கிறேன். இதில் பறவைகளை அடிப்படையாக அடையாளம் காணுவது எப்படி என்று பார்க்கலாம்.


உடல் அளவை வைத்து அடையாளம் காணுவது
குருவி, புல்புல் பறவை, மைனா,புறா போன்றவற்றை அதன் உடல் அளவை வைத்து இனங்காணலாம். தொடர்ந்து இந்த வகைப்பறவைகளை கவனித்து வந்தால் நாளடைவில் எளிதில் அவற்றின் உடல் அமைப்பு துல்லியமாக தெரிந்து விடும். அளவை அறிவதற்கு அவற்றின் அருகில் சென்று கவனித்தல் வேண்டும்.
 
உடல் வடிவமைப்பை வைத்து அடையாளம் காணுதல்
வெளிச்சம் குறைந்த இடத்தில் காணப்படும் பறவைகளை கூட அதன் உடல் வடிவமைப்பை வைத்து இனங்காண முடியும். ஒவ்வொரு பறவையும் ஒவ்வொரு விதமான உடல் வடிவமைப்புடன் காணப்படும். 
உதாரணமாக, உடலமைப்பு என்றால் நீளம், குட்டை மற்றும் தட்டை.
அலகின் அமைப்பு( வளைந்தது,நேரானது)
வாலின் அமைப்பு (நீளம், குட்டை,வளைந்தது, தட்டையானது)
 
நிறத்தை வைத்து அடையாளம் காணுதல்
கிளியை அதன் சிவந்த அலகை வைத்தும், மயிலை அதன் நீலம் பச்சை கலந்த தோகையை வைத்தும் இனம் காணலாம். இனப்பெருக்க காலத்தில் அதன் இறகுகளின் நிறம் மாறக்கூடும். எனவே நிறத்தை வைத்து அடையாளம் காணும் போது சிறிது கவனமுடன் இருக்க வேண்டும்.
 
குரலை வைத்து அடையாளம் காணுதல்
பறவைகளின் குரல் மகிழ்ச்சியாகவோ, அதிக ஒலியுடன் கூடியதாகவோ நீண்ட ஒலியுடனோ குறைந்த ஒலியுடனோ காணப்படும்.
 

செயல்களை வைத்து இனம் காணுதல்

மரங்கொத்தி பறவை அது மரக்கிளைகளில் ஏறிச்செல்லும் விதத்தையும், மூக்கை வைத்தும் கண்டறியலாம். குருவியை அது குதித்து குதித்து செல்லும் விதத்தை வைத்தும் அடையாளம் காணலாம்.
உடல் குறியீடுகளை வைத்து அடையாளம் காணுதல்
இயற்கை தனது பரிசாக ஒவ்வொரு பறவைக்கும் ஒரு உடல் குறியீடுகளை கொடுத்துள்ளது. உதாரணமாக கண்ணில் மீதுள்ள கோடுகள், வெள்ளை மற்றும் பல்வேறு நிறங்கள் என்று வித்தியாசப்படுத்தலாம்.

இப்படி பறவைகளை அடையாளம் காண சில அடிப்படை காரணிகளை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்த பதிவில் நம் வீட்டில் விருந்து (பழைய இட்லி,தோசை,மாடியில் காய வைத்த மாங்காய் வடு) என்று திருடி ஓடும் காக்காய் பற்றி பார்க்கலாம்.

No comments:

Post a Comment