Friday, November 11, 2011

பயிருக்கு நீர் பாய்ச்சும் வீணாகிறதா?


 பயிருக்கு பாய்ச்சப்படும் நீரில் 50 முதல் 80 சதவிகிதம் வரை மண்ணின் அடிமட்ட பகுதிக்கு சென்று வீணாகிறது. மண்ணின் தன்மையை பொறுத்து இப்படி பாய்ச்சப்படும் நீரின் வீணாகும் அளவு மாறுபடுகிறது. மணல் கலந்த குறு மண்ணில் 60 சதவிகிதமும், குறுமண் கலந்த மணல் நிலத்தில் 80 சதவிகிதமும் பாய்ச்சப்படும் நீர் ஈர்க்கப்பட்டு வீணாகிறது என்பதை ஆய்வுகள் நிரூபித்துள்ளன.

சீரிய முறையில் சேறு கலக்குவதும், வேர்ப்பகுதிக்கு கீழ் நீர் கசிந்து செல்லாதவாறு அமைப்புகள் ஏற்படுத்துவதும் நீர் விரயமாவதை கட்டுப்படுத்தும். பிட்டுமென், சிமிண்ட் காங்கிரீட், பாலித்தீன் சிட்டுகளை நில மட்டத்திற்கு கீழ் 30 முதல் 50 சென்டிமீட்டர் ஆழத்தில் பதிப்பதால் நீர் சேதாரத்தை கட்டுப்படுத்த முடியும்.

எனவே, நீர்ப்பாசன திட்டங்களை சரியாக செயல்படுத்த மண் மற்றும் நீரின் தன்மையை தீர்க்கமாக அறிந்திருக்க வேண்டும். அந்த நிலையில் தான் நீரை சிக்கமான பயன்படுத்தி பயிரின் முழு விளைச்சலையும் பெற முடியும்

No comments:

Post a Comment